நெல்லையை பரபரப்பாகிய ஹோட்டல் சம்பவம் - அதிரடி காட்டிய போலீஸ்
திசையன்விளையில் கோவிந்தன் என்பவருக்குச் சொந்தமான இடத்தை, அதே ஊரைச் சேர்ந்த குருநாதன் என்பவர் வாடகைக்கு எடுத்து, அசோக்குமார் என்பவருக்கு உள்வாடகைக்கு விட்டிருந்தார். அந்த இடத்தில் ஹோட்டல் நடத்தி வரும் அசோக்குமார், வாடகைப் பணத்தை குருநாதனிடம் செலுத்தி வந்தார். இதற்கிடையே, குருநாதன் இறந்து விட்டதால், கடையை வாடகைப் பணத்தை இடத்தின் உரிமையாளர் கோவிந்தனிடம் அசோக்குமார் கொடுத்துள்ளார். இதையறிந்த குருநாதனின் 2 மகன்கள் தங்கள் கூட்டாளிகளுடன், ஹோட்டலுக்கு சென்று அசோக்குமாரிடம் தகராறு செய்து, கடையை சூறையாடி விட்டு, அவரையும் தாக்கி விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக அசோக்குமார் அளித்த புகாரின் பேரில், குருநாதனின் மகன் செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் குருநாதனின் மற்றொரு மகன் முருகன் உட்பட 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story