பரபரப்பை கிளப்பிய நெல்லை சிசிடிவி... போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

x

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் திரையரங்கில் நவம்பர் 16 ஆம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் சிக்கியதை தொடர்ந்து முகமது யூசுப் மற்றும் முகமது புகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் மேலும் மூவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை சிராஜுதீன் மற்றும் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மேலப்பாளையம் ஆமின் புரம் பகுதியை சேர்ந்த இம்தியாஸ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் தென் மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இச் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரின் வீடுகள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்