நெல்லையில் நள்ளிரவில் பயங்கரம்.. தொலைந்த தூக்கம்.. தொற்றிய பதற்றம்
நெல்லை டவுனில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை டவுன் மாதா பூ கொடி தெருவில் உள்ள ஒரு கோவில் சுற்றுச்சுவரில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். செல்போனில் பிரீ பயர் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் வந்த இளைஞர்கள் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறார்கள் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரி மீதே இதேபோன்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இது போன்று நடைபெற்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story