நெல்லையை தொடர்ந்து தென்காசியிலும் ஒரு பேரதிர்ச்சி | Nellai | Thanthi TV
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்திலிருந்து தெற்கே செல்லதாயார்புரம் செல்லும் சாலை ஓரத்தில் விவசாய தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பகுதியில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் வெளிப்பகுதிகளில் இருந்து கனரக லாரிகளில் மூடப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்த போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story