பேரூராட்சித் தலைவிக்கு கொலை மிரட்டல்? - நெல்லையில் பரபரப்பு | Nellai | Mayor

x

சாதி ரீதியான நெருக்கடி, கொலை மிரட்டல் கொடுத்து தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நெருக்கடி கொடுப்பதாகவும் நெல்லை மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்...

மாஞ்சோலையைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளியான திமுகவைச் சேர்ந்த அந்தோணியம்மாள் பேரூராட்சி மன்ற தலைவியாக உள்ளார்... கடந்த சில மாதங்களாகவே பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இவருக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து பணியை செய்ய விடாமல் தடுப்பதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் அந்தோணியம்மாள் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு கட்சியினர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மணிமுத்தாறு பேரூராட்சி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பேரூராட்சி அந்தோணியம்மாளுடன் வந்து மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்தோணியம்மாள் கவுன்சிலர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்