பிரபல தொழிலதிபர் வீட்டில் IT ரெய்டு - பரபரக்கும் நெல்லை

x

நெல்லையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வண்ணார்பேட்டை, இந்திரா காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் மாட்டு எலும்புகளை அரைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, பூக்கள், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வது என வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இவர் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் வந்த நிலையில் கடந்த 6ம் தேதி மதுரையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் வெங்கடேஷ் வீடு, அலுவலகம், குவாரி, குடோன்கள் என நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் உள்ள 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். வண்ணார் பேட்டையில் உள்ள வெங்கடேஷின் வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் ஆய்வை நடத்தி வருகின்றனர்,தொடர்ந்து இன்று 4வது நாளாக வருமான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது... இன்று கூடுதலாக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடந்து வருகிறது. மேலும் அவரிடம் பணி செய்யும் நபர்களின் வீடுகளிலும் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்