நீட் தேர்வு பயம் = விழுப்புரம் மாணவி தற்கொலை - தொடரும் அவலம்
உயிரிழந்தவர், வெள்ளிமேடுபேட்டை அருகே உள்ள தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ்-கிருஷ்ணவேணி தம்பதியரின், 2 வது மகள் இந்து ஆவார். அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இந்து, நல்ல மதிப்பெண் பெற்று 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். பிறகு, புதுச்சேரியில் தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த இந்து, 2022ஆம் ஆண்டு நீட் தேர்வில் 350 மதிப்பெண்கள் பெற்று தோல்வியை தழுவினார். இருப்பினும், நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2வது ஆண்டாக வீட்டிலிருந்த படியே, நீட் தேர்வு பயிற்சி செய்து, ஓபிசி சான்றிதழுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதன்படி, கிடைத்த ஓபிசி சான்றிதழை இந்துவிடம் கொடுத்த, அவரின் தந்தையும், சகோதரரும் விவசாய வேலைக்காக சென்றதைத் தொடர்ந்து வீட்டில் இந்து தற்கொலை செய்தார். வீடு திரும்பியதும், இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளிமேடு பேட்டை போலீசார், விசாரணையில் செய்து வருகின்றனர்.