"நீட்..." உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன தகவல்
நீட் தேர்வு சீர்திருத்தம் தொடர்பான உயர்நிலை நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, நீட் தேர்வு சீர்திருத்தம் தொடர்பான உயர்நிலை நிபுணர் குழு அதன் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும்,
அவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், எனவே விசாரணையை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையேற்ற உச்சநீதிமன்றம், 3 மாதங்களுக்கு விசாரணையை தள்ளி வைத்து, ஏப்ரலில் பட்டியலிட உத்தரவிட்டுள்ளது
Next Story