நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது நயன்தாராவின் ஆவணப்படம்
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நடிகை நயன்தாராவின் காதல் திருமணம் பற்றிய ஆவணப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
நடிகை நயன்தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல், திருமணம், திரைத்துறை பயணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, "நயன்தாரா - beyond the fairy tale " என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். ‘நானும் ரவுடிதான்‘ படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் சேர்ப்பது தொடர்பாக, நயன்தாராவுக்கும், படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுசுக்கும் இடையே எழுந்த பிரச்சனை, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ஊடகத்தினருக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்புத்தள காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆவணப்படம், நள்ளிரவு 12 மணி அளவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் நயன்தாராவின் குற்றச்சாட்டிற்கும், அவரது ஆவணப்படத்திற்கும், தனுஷ் தரப்பிலிருந்து எதிர்வினை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.