``சிரிச்சுகிட்டு போயிட்டே இருப்போம்'' - சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து வீடியோ வெளியிட்ட விக்னேஷ்
சர்ச்சைகளை சிரித்துக் கொண்டே கடந்து விடுவோம் என, இயக்குநர் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் அரசின் சொத்தை கையகப்படுத்த முயற்சித்ததாக பரவும் தகவல் பொய்யானது என்றும், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பிற்காக அனுமதி கேட்க அமைச்சரை சந்தித்ததாகவும் விளக்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நயன்தாரா உடன் சிரித்து பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், என்ன நடந்தாலும் சிரித்துக் கொண்டே கடந்து போவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story