முதல்முறையாக முதல் காதல், பிரேக்கப் குறித்து மனம் திறந்த நயன் - ``கூச்சமே இல்லையா?'' திட்டிய தனுஷ்
முதல்முறையாக முதல் காதல், பிரேக்கப் குறித்து மனம் திறந்த நயன் - ``கூச்சமே இல்லையா?'' போன் போட்டு மானாவாரியாக திட்டிய தனுஷ்
தன் முதல் காதல் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் தன் நம்பிக்கைக்கு உரியவராக இல்லை எனவும் தன் கடந்த கால வாழ்க்கையின் கசப்புகள் குறித்து பேசியிருக்கிறார் நடிகை நயன்தாரா. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில்தான் இவையனைத்தும்...
தனது திரையுலக வாழ்க்கையிலும், காதல் வாழ்க்கையிலும் நடந்த கடந்த கால கசப்புகள் குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகை நயன்தாரா...
தன் முதல் காதல் மீது, காதலையும் கடந்த நம்பிக்கையை வைத்திருந்ததாக தெரிவித்திருக்கிறார்...
அவருக்காக தான் நேசித்த திரைத்துறையை விட்டு விலக முடிவெடுத்திருந்த சூழ்நிலையிலும், அவர் தனக்கு நம்பிக்கைக்கு உரியவராக இல்லை என பேசியிருக்கிறார்...
இதனால்தான், நம்மை பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என முடிவெடுத்து, தற்போது அதனை செய்து காட்டியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்...
தனது காதல் முறிவு குறித்து பலரும் பலவிதமான கதைகளை பேசினார்கள்.. ஒரு உறவில் பிரச்சனை என்றால், எல்லோரின் கேள்விகளும் பெண்கள் மீது தான் இருக்கிறது... ஆண்களும் கேள்விகளுக்கு உட்பட்டவர்கள் என்று தன் கடந்த கால கசப்புகளை பகிர்ந்திருக்கிறார் நயன்தாரா.
தன் திருமணம் தொடர்பான ஆவணப்பட ப்ரிவ்யூ ஷோக்கு முன், அறிக்கை வெளியிட்டு நடிகர் தனுஷால் தனக்கு நேர்ந்தது குறித்து நயன்தாரா தெரிவித்தது சர்ச்சையை ஏறடுத்தியிருந்தது..
இந்நிலையில் ஆவணப்படத்தில் பேசிய நடிகை ராதிகா, 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பின் போது, நடிகர் தனுஷ் தன்னை தொடர்பு கொண்டு, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது தங்களுக்கு தெரியாதது.. கூச்சமாக இல்லையா என கேட்டதாக தெரிவித்திருக்கிறார்..
இதன்பின் தான் தனக்கு விக்கி - நயனின் லவ்ஸே தெரியும் என அவர் பேசியும் இருக்கும் நிலையில், நயன் தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருக்கும் அவரின் திருமணம் தொடர்பான ஆவணப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..
தந்தி டிவி செய்திகளுக்காக சென்னையிலிருந்து செய்தியாளர் பிரகாஷ் மற்றும் விமல்ராஜ்...