இந்திய போலீசே தேடிய நக்சலைட் தலைவர் என்கவுண்டர்
கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே நடந்த என்கவுன்ட்டரில் நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா உயிரிழந்தார். கப்பினாலே கிராமத்தில் உள்ள அடர் வனத்தில், இந்த என்கவுன்ட்டர் நடைபெற்றுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நக்சல் எதிர்ப்பு படை மீது, நக்சல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து நடைபெற்ற எதிர் தாக்குதலில் விக்ரம் கவுடா உயிரிழந்துள்ளார். இதனிடையே, கப்பினாலே கிராமத்திற்குள் ஊடுருவிய 5 பேர் கொண்ட நக்சல் கும்பல்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story