ஒரு கல்லை வீசிய மோடி.. பல அம்புகள் திரும்பி பாய்ந்ததால் அதிர்ச்சி
ஒரு கல்லை வீசிய மோடி.. பல அம்புகள் திரும்பி பாய்ந்ததால் அதிர்ச்சி
பாஜகவின் 100 நாள் செயல் திட்டம் என்ற தம்பட்டம் மலிவான விளம்பர ஸ்டண்ட் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகள் மூலம் மக்கள் முன்னால் காங்கிரஸ் கட்சி அம்பலப்பட்டு நிற்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் மிக உச்சத்தில் இருப்பதாகவும்,
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நடைபெற்றதற்கு யார் பொறுப்பு? -
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றதன் மூலம், 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை பறித்தது யார் என்றும் வினவியுள்ளார்.
தக்காளி விலை 247 சதவீதமும், உருளைக்கிழங்கின் விலை 180 சதவிகிதமும், வெங்காயத்தின் விலை 60 சதவீதமும் உயர்ந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மோடியின் உத்தரவாதம் என்பது 140 கோடி இந்தியர்கள் மீதான கொடூரமான நகைச்சுவை என விமர்சித்துள்ள கார்கே, பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் 100 நாள் செயல் திட்டம் என்ற சுய தம்பட்டம், மிக மலிவான விளம்பர ஸ்டண்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.