"BSNL பயன்படுத்துங்க" - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு | BSNL | New Order

x

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் BSNL இணைய சேவையை பயன்படுத்த, மாநிலத் திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நடுநிலைப் பள்ளிகளிலும் இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ள சமக்ர சிக்க்ஷா அபியான் திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஏப்ரல் முதல், SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும் எனவும், இணைய சேவை ஏற்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பிஎஸ்என்எல் வாயிலாக இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்