மேற்கூரை பிரித்து கொட்டிய அதிர்ச்சி... விடிந்ததும் காத்திருந்த ஷாக்

x

நாமக்கல் நகரில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, பொருட்கள், பணம் திருடப்பட்டது இன்று காலை கண்டறியப்பட்டது. ஒன்றே கால் லட்சம் ரூபாய் மற்றும் கடையில் இருந்த 2 குக்கர், 2 மின்சார அடுப்பு, பாதம், பிஸ்தா, ஹார்லீஸ், புஸ்ட் ஆகிய பொருட்களை எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டனர். கடையின் வெளியே இருந்த சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்க் ஆகியவை எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், ஒரு மேல்சட்டை மற்றும் முகக்கவசம் கழட்டி போடப்பட்டது தெரிய வந்தது. போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்