வேனுக்கு வெளியே தொங்கி.. பப்ளிக்கை அலறவிட்ட பாய்ஸ்... இறுக்கிபிடித்து சம்பவம் செய்த போலீஸ்

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காரின் வெளியே தொங்கியபடியே இளைஞர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குமாரபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், வாழவந்தியார் சரவணன் என்பவர் தனது சமுதாய சங்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்கும் நிகழ்வு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக பள்ளிப்பாளையத்தில் இருந்து குமாரபாளையம் நோக்கி சென்ற இளைஞர்கள் சிலர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காரின் வெளியே தொங்கியபடி பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியை சுற்றி சுற்றி வந்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் காரை மடக்கிப்பிடித்து எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்