தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்.. 10ம் வகுப்பு சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை - வெளியான புது தகவல்

x

நாமக்கல் மாவட்டத்தில் கூலி வேலை செய்து வரும் இளைஞர் பெற்றோருடன் வசித்து வந்தார். இளைஞருக்குத் தங்கை முறையுடைய சிறுமி இளைஞரின் வீட்டில் தங்கி 10 ம் வகுப்பு படித்து வந்து இருக்கிறார். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவருடன் தகாத உறவு கொண்டு இருக்கிறார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்து இருக்கிறார். இளைஞர் கர்ப்பத்தைக் கலைக்க முயன்று இருக்கிறார் ஆனால் முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமிக்கு வயிறு வலி என்று மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதனை செய்த போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமி ஆண் குழந்தையைப் பிரசவித்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி வளர்ப்பு மகளாகத் தத்தெடுக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்