ரியல் எஸ்டேட் நபரிடம் காட்டிய கத்தி.. கடைசியில் வழிப்பறி செய்தவனுக்கு அதிர்ச்சி..
ரியல் எஸ்டேட் நபரிடம் காட்டிய கத்தி.. கடைசியில் வழிப்பறி செய்தவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பவித்திரம் புதூர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சத்யா என்பவர் துறையூர் பிரதான சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, சத்யாவின் வாகனத்தை வழிமறித்த மனோஜ்குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது பையில் இருந்த 5,200 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் சத்யா அளித்த புகாரின் பேரில் மனோஜ்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
Next Story