நிற்க முடியாமல் குச்சியை பிடித்து அமர்ந்த நோயாளி.. அசால்ட்டாக போனில் பேசிக்கொண்டிருந்த மருத்துவர்..? வெளியான பின்னணி

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியை அமர வைத்து விட்டு செல்போனில் மருத்துவர் உரையாடிக் கொண்டிருப்பதைப் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... பல் சிகிச்சை மருத்துவர் நீண்ட நேரம் செல்போனில் உரையாடிக் கொண்டிருப்பதும். அந்த வயதான பெண்மணி ஏக்கத்துடன் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன... இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, அந்த பெண் ஓபி சீட் வாங்காமல் பல் மருத்துவரை அணுகியதாகவும், அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அங்குள்ள ஒரு பணிப்பெண் ஓபி சீட் வாங்கி வருவதற்கு சென்ற பொழுது அப்பெண் அமர்ந்திருக்கும் வீடியோ தான் அது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது...

மேலும் துறை நீதியாகவே மருத்துவர் போனில் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்