மின்கசிவால் தீ பிடித்து எரிந்த வீடு - முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.

பள்ளிபாளையம் அடுத்த ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வசித்து வரும் முதியவர் ஜெயராமன், வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்