3 பேர் தற்கொலை வழக்கு- காரணமானவர்களை கைது செய்யக்கோரி புகார்

3 பேர் தற்கொலை வழக்கு- காரணமானவர்களை கைது செய்யக்கோரி புகார்
x

நாமக்கல் அருகே மனைவி குடும்பத்தினரின் டார்ச்சலால் கணவர் தனது பெற்றோருடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு முன்பு 3 பேரும் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே உள்ள அ.வாழவந்தியை சேர்ந்தவர் சுரேந்தர். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், தனது பெற்றோர் செல்வராஜ், பூங்கொடி ஆகியோருடன் சேர்ந்த கடந்த 15-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு 3 பேரும் மரண வாக்குமூலம் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. இருப்பினும், தற்கொலைக்கு காரணமான சுரேந்தரின் மனைவி சினேகா குடும்பத்தினர் மீது எருமபட்டி போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், இதுகுறித்து பேசக்கூடாது என போலீசார் மிரட்டி வருவதாகவும் சுரேந்தரின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்