``இதை முதன்முதலில் செய்தவர் நல்லகண்ணு..'' - அரங்கம் அதிர சொன்ன CM ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட்டின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டை ஒட்டி 'மாமனிதருக்கு மக்கள் விழா’ நடைபெற்றது... சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நல்லகண்ணுவிற்கு சிறப்பு செய்தும், கவிதை நூலை வெளியிட்டும் கௌரவித்தார்... தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் தேசிய இயக்கம் மூன்றும் இங்கு சங்கமமாகி உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை விட நமக்கு பெரிய பெருமை எதுவும் இல்லை எனவும் பூரித்தார்.
Next Story