ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்ற நாகர்கோவில் காசி தலையில் அடுத்த பேரிடி
பாலியல் குற்றவாளி காசியின் மீது கந்து வட்டி தொடர்பான புகாரில் மேலும் மூன்றாண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி. இவர் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்ததாக கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் காசியின் மீது நாகர்கோவிலை சேர்ந்த இருவர் கந்துவட்டி புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு நாகை குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் 35 சாட்சிகளையும், 88 ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி காசிக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனையும், 4000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். காசியின் தந்தை தங்க பாண்டியனுக்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் , புரோக்கர் நாராயணனுக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளாது.