வலையை கடலில் இறக்கிய மறுநொடி மயங்கி விழுந்து பலியான மீனவர்

x

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த பால்ராஜ் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழுக்கே கடலில் வலையை விரித்து மீன் பிடிக்க தயாராகி கொண்டிருந்தனர். அப்போது வலையை கடலில் இறக்கிக் கொண்டிருந்த பால்ராஜ் திடீரென படகிலேயே மயங்கி விழுந்துள்ளார்... சக மீனவர்கள் விசைப்படகை நாகை துறைமுகத்திற்கு கொண்டு வந்து உடனடியாக பால்ராஜை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மீனவரை பரிசோதித்த மருத்துவர்கள், பால்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மீனவர் உயிரிழந்தது குறித்து சக மீனவர்கள் அளித்த புகாரின் பேரில், நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்