மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த சடலம்... நகைக்காக மூதாட்யை கொன்ற மர்ம நபர்கள்..

x

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே, 70 வயது மூதாட்டியை கொன்று, அவர் அணிந்திருந்த நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம் அடுத்த மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள். 70 வயது மூதாட்டியான இவர் தனியாக வசித்து வந்திருக்கிறார். மூதாட்டிக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில், மற்றொருவர் மருதூர் கிராமத்திலே தனியே வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள தைலமரத்தடியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

-


Next Story

மேலும் செய்திகள்