சோழர் எழுதி வைத்த சொத்து... இன்று ஆதாரமாய் நின்று நீதி கொடுத்த அதிசயம்!

x

நாகை மாவட்டம், திருச்செங்காட்டங்குடி கிராமத்தில், ராதாகிருஷ்ணன் என்ற 70 வயது முதியவரின் பெயரில் இருந்த மடத்தை, அதே பகுதியைச் சேர்ந்த உத்திராபதி என்பவரின் பெயரில் கடந்த 1996-ஆம் ஆண்டு சிலர் சட்ட விரோதமாக பெயர் மாற்றம் செய்துள்ளனர். காலப்போக்கில் இதை அறிந்த ராதாகிருஷ்ணன், மடத்தை மீட்பதற்காக, கடந்த 5 ஆண்டுகளாக நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்துள்ளார். அவருடைய மனுவை விசாரித்த நாகை கோட்டாட்சியர் அரங்கநாதன் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து ஆவணங்களை கொண்டு வருமாறு இரண்டு தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.

பழங்கால சொத்து என்பதால் உத்திராபதி தரப்பினரிடம் முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், முதியவர் ராதாகிருஷ்ணன் பழைமை வாய்ந்த செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார். அதனை ஆய்வு செய்த நாகை கோட்டாட்சியர், அரசு ஆவண குறிப்புகளை சரிபார்த்து 200 ஆண்டுகாலதிற்கு முன்பு உருவாக்கப்பட்ட சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று ராதாகிருஷ்ணன் தரப்புக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். 5,ஆண்டுகளாக போராடிய முதியவருக்கு செப்பு பட்டயம் மூலம் நீதி கிடைத்திருப்பது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்