நகைக்கடை ஓனருக்கு கடையில் காத்திருந்த அதிர்ச்சி - பரபரப்பு சம்பவம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகை கொள்ளையடிக்கப்பட்டது. வேதாரண்யம் வட்டம் மணக்குடியில் கடைத்தெருவில் அமைந்துள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். கடையில் இருந்த 49 கிலோ வெள்ளி, ஆறு சவரன் தங்கம் உள்பட 50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தலைஞாயிறு போலீசார், கைரேகை நிபுணர்களை வரழைத்து தடயங்களை சேகரித்தனர். நகைக்கடைகொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story