5 வருடம் தொப்பை என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வயிற்றில் இருந்த 11 கிலோ...

x

பெண்ணின் வயிற்றில் இருந்த, 11 கிலோ சினைப்பை கட்டியை அரசு மருத்துவர் ஒருவர் வெற்றிகரமாக அகற்றியுள்ளார். நாகைய சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 11 கிலோ எடை கொண்ட கட்டி ஒன்றை அரசு மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். நாகை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்றும் டயட் மேற்கொண்டும் தனது தொப்பையை குறைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக தொப்பை குறையாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பெண்ணுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய அரசு மருத்துவரான பாண்டியராஜன் வயிற்றில் ஸ்கேன் எடுப்பதற்கு அறிவுறுத்தினார். பின்னர் ஸ்கேன் எடுத்துப் பார்த்த பொழுது அந்தப் பெண்ணின் கர்ப்பப்பைக்கு அருகே கட்டி ஒன்று இருந்ததை மருத்துவர் கண்டறிந்தார். உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் மூன்று மணிநேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார் 30 சென்டிமீட்டர் நீளம் 26 சென்டிமீட்டர் அகலம் கொண்ட 11 கிலோ எடையுள்ள சினைப்பை கட்டியை எந்தவித பாதிப்பும் இல்லாமல் அகற்றினார். ஆயிரத்தில் ஒருவருக்கே இது போன்ற பிரச்னைகள் வருமென்றும், தகுந்த சிகிச்சை எடுக்க தவறக்கூடாது என்றும் மருத்துவர் பாண்டியராஜன் எச்சரித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்