#Breaking|| சோலி முடிஞ்சு.. MY V3 Ads APP-க்கு மூடுவிழா.. `இவர்கள்' மட்டுமே யூஸ் பண்ணலாம்.. கழுகுப் பார்வையில் கோவை.. ஓனர் லாக்..

x

நிறுவனத்தில் ஏற்கனவே இணைந்துள்ள நபர்கள் மட்டும் ஆன்லைன் அப்ளிகேஷனை உபயோகப்படுத்தலாம் புதியதாக யாரும் இணைய முடியாத வகையில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் அப்ளிகேஷனை முடக்கி வைத்துள்ளனர்

கைது சிறையில் அடைப்பு

Myv3ads உரிமையாளர் சக்தி ஆனந்தன் நேற்று இரவு கோவை பந்தைய சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை இரண்டாவது கூடுதல் விரைவு நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் அதனை தொடர்ந்து போலீஸ்சார் கோவை மத்திய சிறையில் அவரை அடைத்தனர்

ஆன்லைன் அப்ளிகேஷன் முடக்கம்

மேலும் myv3 adds நிறுவனத்தின் ஆன்லைன் அப்ளிகேஷன் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்டது -

புதியதாக யாரும் இணைய முடியாத வகையில் தடுத்து நிறுத்திய சைபர் கிரைம் போலீசார்

இந்த நிலையில் தற்போது அந்த நிறுவனத்தில் ஏற்கனவே இணைந்து தினமும் வீடியோ பார்த்து சம்பாதித்து வரும் நபர்கள் மட்டும் அந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்தலாம். புதியதாக யாரும் அதில் இணைய முடியாத வகையில் போலீசார் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளனர்

போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நாளை நீதிமன்றத்தில் மனு அளிக்க உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்