தண்டவாள போல்ட்டுகளை கழற்றிய மர்ம நபர்கள்.. ரயிலை கவிழ்க்க சதியா? வெளியான அதிர்ச்சி தகவல்

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்து திருவாலங்காடு ரயில் நிலையத்தில் சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் இரண்டு தண்டவாளங்களில் போல்டு நட்டுகள் கழற்றப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் சம்பவ இடத்தில் ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் இறையன் மற்றும் ஐஜி பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இதேபோன்று போல்ட் நட்டுகளை கழற்றி ரயில் விபத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்