மர்ம முறையில் படை எடுக்கும் விஷ எறும்புகள் - கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கரந்தமலை அடிவாரத்தில், கடந்த சில வாரங்களாக மர்மமான முறையில் விஷ எறும்புகள் படையெடுத்து வருகின்றன...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விஷ எறும்புகள் படையெடுத்து வருவதால், அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கரந்தமலை அடிவாரத்தில், கடந்த சில வாரங்களாக மர்மமான முறையில் விஷ எறும்புகள் படையெடுத்து வருகின்றன.
இதனால் இங்குள்ள விவசாய நிலங்களில் அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும் இங்குள்ள வன விலங்குகள் மற்றும் கால்நடைகளை விஷ எறும்புகள் கடித்து துன்புறுத்துவதாகவும், மனிதர்களை கடித்தால் காலில் புண்ணாகி வெடிப்புகள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே விஷ எறும்புகளை கட்டுப்படுத்துமாறு தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story