சென்னைவாசிகள் ரசிச்சி ருசிச்சி குடிக்கிற மட்டன் சூப்பின் திகில் பின்னணி..பீதியாக்கும் வீடியோ

x

சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட்டில் இருக்கும் ஆட்டிறைச்சி கடைகள் மற்றும் குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, குடோனில் பாதுகாப்பற்ற முறைகளில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால் மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இங்கிருந்து சென்னையில் முக்கிய நட்சத்திர ஹோட்டல் மற்றும் சிறிய கடைகளுக்கு ஆட்டுக்கால் சப்ளை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 நாட்களுக்கு முன்பாக ஒன்றரை டன் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதில் எங்கெல்லாம் இறைச்சி சப்ளை செய்யப்படுகிறது என்பதை விசாரித்து, சைதாப்பேட்டை மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனையை நடத்தியதும் தெரியவந்துள்ளது. கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்