"பணம்.. தங்கம்.. வெள்ளியுடன் கிடந்த பொருள்..." பார்த்தவுடன் ஷாக்கான ஊழியர்கள்
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக 52 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம், 36 சவரன் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி கிடைக்கப் பெற்றுள்ளது. இத்துடன், விலை உயர்ந்த செல்போன் ஒன்றும் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூரை சேர்ந்த தினேஷ் என்ற பக்தர் முருகனை வழிபட வந்து தனது விலை உயர்ந்த செல்போனை உண்டியலில் தவற விட்டுள்ளார். இந்நிலையில், கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பற்றி தகவல் அறிந்து வந்த தினேஷ் செல்போனை உரிமை கோரியுள்ளார். ஆனால், உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது..... செல்போனைக் கொடுக்க முடியாது வேண்டுமென்றால், அதில் உள்ள தரவுகளை மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், செல்போனை எதிர்பார்த்து வந்த பக்தர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.
Next Story