அறுபடை வீடுகளிலும் ஒலித்த 7 வயது சிறுமியின் குரல்
பிரமாண்டமாய் அரங்கேறிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் தனது காந்த குரலால் கந்தனையே கவர்ந்து விட்டார் சிறுமி தியா...
கணீர் குரல், அசர வைக்கும் முக பாவனைகள், அதீத முருக பக்தி என காண்போரை பக்தி கடலில் ஆழ்த்தும் தியா, சிறு வயது முதலே பக்தி பாடல்களை பாடி வருகிறார்...
பல மேடைகளில் பாடல்கள் பாடியுள்ள இச்சிறுமிக்கு ஏழே வயது தான்...
கந்தனின் கண்மணி என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிறுமி தியா, அறுபடை வீடுகள் அனைத்திலும் தனது குரலால் முருகனை குளிர்வித்து விட்டார்...
அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற வரிக்கு ஏற்ப அத்தனை லட்சணமும் கொண்ட முருகனையே, கண்முன் நிறுத்துகிறது சிறுமி தியாவின் முகபாவனைகள்..
மாநாட்டில் மட்டுமல்ல, சமூக வலைத்தளத்திலும் ஃபேமஸ் ஆன இச்சிறுமியின் தமிழ் உச்சரிப்பை போற்றாத ஆளேயில்லை...
சிறுமியின் பக்தி உணர்வும், குரல் வளமும் பக்தர்களை மட்டுமல்ல, பார்வையாளராக இருப்போரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது...
பக்குவமான பேச்சு, வியக்க வைக்கும் பக்தி என மாநாட்டில் இருந்த அனைவரையும் சிறுமி கவர்ந்திழுக்க, இதில் கலந்து கொள்வதில் பெருமையாக உள்ளதாக கூறி நெகிழ்ந்தார் சிறுமி தியா...
சிறுமியின் பாடலை அமைச்சர் சேகர்பாபு முதல் பார்வையாளர்கள் வரை மெய் மறந்து கண்டு களித்தனர்..
முப்பொழுதும் முருகனையே எண்ணி முருகன் பாடலையே பாடி மெய் சிலிர்க்க வைக்கும் சிறுமியை கொண்டாடி வருகின்றனர் முருகன் பக்தர்கள்...