பாச வெறி பிடித்தவனை துள்ள துடிக்க கொன்றுவிட்டு அங்கேயே நின்று போட்டோவும் எடுத்து கொண்ட கொலைகாரன்
தன் மீது பாச வெறி பிடித்தவனை துள்ள துடிக்க கொன்றுவிட்டு அங்கேயே நின்று கலர் கலராக போட்டோவும் எடுத்து கொண்ட கொலைகாரன்
ரேணுகா சுவாமி கொலை வழக்கில், கொலை நடந்த இடத்தில் கன்னட நடிகர் தர்ஷன் தனியே எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி, தர்ஷனுக்கு எதிரான சாட்சியங்களை மேலும் வலுவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக...
நடிகை பவித்ரா குப்தாவிற்கு இன்ஸ்டாவில் ஆபாச செய்தி அனுப்பியதற்காக ரேணுகா சுவாமி என்பவரை, கர்நாடகாவின் முன்னணி நடிகரான தர்ஷன் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது..
இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா குப்தா உட்பட 17 பேரை கர்நாடகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்..
இதில், நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் விதமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் சிறை மாற்றப்பட்டிருந்தார்....
மேலும், நடிகர் தர்ஷனும், பவித்ரா கவுடாவும் தங்களுக்கு ஜாமின் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன..
இதனிடையே, வழக்கில் கைதான சிலருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்ததும், நடிகர் தர்ஷன் தனது முதுகு வலியை காரணம் காட்டி, அது தொடர்பான அறுவை சிகிச்சைக்காக ஜாமின் பெற்று வெளியில் வந்ததும் குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில், சுமார் 1,300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ரேணுகா சுவாமி கொலை வழக்கில் போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தனர்.
அதில், கொலை நடந்த இடத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதை காட்டும் வகையிலான புகைப்படங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. மேலும், 40க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில்தான், கொலை நடந்த இடத்தில் நடிகர் தர்ஷன் மட்டும் தனியே எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரவி வருகிறது.
கொலை நடந்ததாக கூறப்படும் நேரத்திற்கும், தர்ஷன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நேரமும் தர்ஷனுக்கு எதிரான சாட்சியங்களை மேலும் வலுப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இதனை ஆதாரமாக வைத்து தர்ஷனுக்கான ஜாமினை ரத்து செய்யும் முயற்சியில் கர்நாடக போலீசார் இறங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.