அமைச்சர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போட்ட வழக்கு - ஐகோர்ட்டில் நடந்தது என்ன?

x

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. கடந்த 2006- 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் அமைச்சர் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து, உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்