வீட்டில் தனியாக இருந்த தலைமை காவலரின் தாய்.. இறந்து கிடந்த சம்பவம் - போலீசார் விசாரணை
சாத்தான்குளம் டி.எஸ்.பி அலுவலக தலைமை காவலர் விக்ராந்தின் தாய் வசந்தா. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், உறவினர்கள் வழக்கம் போல் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர் போனை எடுக்காததால், வீட்டிற்கு சென்று பார்த்தபோது இறந்த நிலையில் கிடந்துள்ளார். அத்துடன் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளையும் காணவில்லை என்பதால், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story