கணவனையும், மகனையும் இழந்து நிற்கும் மாமியார் - 105 வயதிலும் ஒரு குறையும் இல்லாமல் கொண்டாடும் மருமகள்

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மூதாட்டியின் 105வது பிறந்தநாளை குடும்பத்தினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். அந்தியூர் அருகே ஒலகடம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி அம்மாள், கணவர் மற்றும் மகனை இழந்து மருமகள் ராதாமணியுடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பேரன்கள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி என ஆறு பேர் மற்றும் எள்ளு பேரன், எள்ளு பேத்தி உள்ளனர். இந்த சூழலில், லட்சுமி அம்மாளின் 105வது பிறந்தநாளையொட்டி, குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்தனர். பின்னர் ஒவ்வொருவராக மூதாட்டியிடம் ஆசி பெற்றதோடு, அவரது கையால் ஒரு மரக்கன்றை நட்டுவைத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்