"கொடுத்த காச திருப்பி கேட்பியா"..கோபத்தில் உயிரை எடுத்த பயங்கரம் - இறந்ததே தெரியாமல் மகனை தேடிய தாய்

x

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் கொளத்துப்பாளையத்தை சேர்ந்த யுவராஜ், கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாததால் அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடியுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் அவரது தாய் ராமாயாள் புகார் அளித்தார். விசாரணியில் யுவராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொளத்துப்பாளையத்தை சேர்ந்த தங்கராசு என்பவர் யுவராஜிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடனாக பெற்ற நிலையில் , கடன் தொகையை திருப்பி கேட்ட யுவராஜை அவரும் அவரது நண்பர் பூவேந்திரனும் மது அருந்தலாம் என யுவராஜை அழைத்து அவரை கொலை செய்துள்ளனர். திங்களூர் அருகே உள்ள நிச்சாம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் தங்கராஜூம், பூவேந்திரனும் சேர்ந்து யுவராஜை வாய்க்காலில் தள்ளியதில் நீச்சல் தெரியாத யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து , கொலை சம்பந்தமாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்