குரங்கு குட்டி; காத்து தந்தையாக மாறிய டாக்டர்-பிரித்த `விதி'... இணைவார்களா? காத்திருக்கும் தீர்ப்பு

x

குரங்கு குட்டிக்காக நீதிமன்றம் சென்ற கால்நடை மருத்துவர், சட்டப் போராட்டத்துடன், பாசப் போராட்டத்தையும் சேர்த்து நடத்திய சுவாரஸ்ய சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


கடந்த 2023ம் டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாவலர் ஒருவர் மீட்டு, 10 மாத சிகிச்சைக்கு பின் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுள்ளனர்.

இந்த இடைப்பட்ட 10 மாதத்தில் குரங்கு குட்டியை பெற்ற பிள்ளை போல் கவனைத்து வந்துள்ளார் கால்நடை மருத்துவர் வல்லயப்பன்..

அதற்கு உணவு கொடுப்பது.... கொஞ்சுவது என பாசத்தைக் கொட்டி பராமரித்து வந்துள்ளார்.

ஆனால் தவறான புகாரால் தன்னிடம் இருந்து குரங்கு குட்டியை பிரித்து எடுத்து சென்றதாகவும், தற்போது அந்த குரங்கு குட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் குரங்கு குட்டியை பாதுகாத்த வல்லையப்பன்...

குரங்கின் மீதான பிரியத்தால் அதனை பராமரிக்க வேண்டும் என கோரிய அவர், குரங்கை மீண்டும் தன்னிடம் ஒப்படைத்து அதற்குரிய சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், குரங்கு குட்டியை நேரில் பார்வையிட அனுமதியளித்த நிலையில், நேரடியாக சென்று குரங்கை பார்வையிட்டார்...

அப்போது, தன்னை வளர்த்தெடுத்த கால்நடை மருத்துவரை கண்டதும் துள்ளி குதித்து பாசத்தை காட்டியது குரங்கு குட்டி....

பார்த்து பார்த்து வளர்த்த குரங்கு குட்டியை நீண்ட நாட்களுக்கு பின் கண்ட மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், குரங்கு குட்டியின் உடல்நிலை மோசமாகவுள்ளதாக தெரிவிக்கிறார் கால்நடை மருத்துவரின் மகள் ப்ரதீபா...

இது தொடர்பாக பூங்கா அதிகாரிகள் கூறுகையில், அரசு உத்தரவுப்படி குரங்கை வனத்துறை மீட்டு அதற்கான உரிய சிகிச்சையை பூங்கா மருத்துவர்கள் கொடுத்து வருவதாகவும் அட்டவணைப்படுத்தப்பட்ட விலங்கு என்பதால் தனி நபர் அதை வளர்க்க முடியாது எனவும் கோர்ட் விசாரணையில் இது குறித்து உரிய பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்..

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய குட்டி குரங்கை சொந்த பிள்ளை போல பார்த்து வந்த கால்நடை மருத்துவர் வல்லைப்பன் அதனை தன்னிடம் ஒப்படைக்க கோரி போராடி வருகிறார்

குட்டி குரங்கு அவரிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது பூங்காவிலேயே தொடர் சிகிச்சையில் இருக்குமா என்ற கேள்விக்கு உயர் நீதிமன்றத்தில் வருகிற 14-ஆம் தேதி பதில் கிடைக்கும்.....


Next Story

மேலும் செய்திகள்