இந்திய மண்ணில் நின்று சீனாவுக்கு அதிர்ச்சி மெசேஜ்?
இந்தியாவின் நலனுக்கு ஊறு விளைவிக்க எந்த வகையிலும் இலங்கை மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க கூறியுள்ளார்.
இலங்கையின் நிதி நெருக்கடி காலத்தில் பொருளாதார உதவியை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக அனுரகுமார கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தாகவும், அந்த புதைகுழியில் இருந்து வெளிவர தங்களுக்கு இந்தியா பெரும் ஆதரவளித்தது என்றும் அவர் கூறினார்.
மீனவர் பிரச்சனைக்கு நீடித்த மற்றும் நிரந்தர தீர்வு காண விரும்புவதாக குறிப்பிட்ட இலங்கை அதிபர், இந்தியாவின் நலனுக்கு ஊறு விளைவிக்க எந்த வகையிலும் இலங்கை மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என பிரதமரிடம் தாம் உறுதியளித்திருப்பதாக கூறினார். மேலும் இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்தார்.