மொபைல் ஆர்டர் போட்டவரை அதிர வைத்த டெலிவரி - பார்சலை பிரித்ததும் பகீர்
ராணிப்பேட்டையில் ஆன்லைனில் ஆண்ட்ராய்டு மொபைல் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் டவ் சோப் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ஆர்டர் செய்து பணம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் பார்சல் டெலிவரி செய்யப்பட்டதையடுத்து, லோகேஷ் அதனை பிரித்து பார்த்தபோது, போனுக்கு பதிலாக பார்சலில் குளியல் சோப் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பிளிப்கார்ட் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகாரளித்துள்ளார்.
Next Story