நேரம் பார்த்து MLA-வை அடித்த பிரபல நடிகையின் கணவர்..?
தான் பணம் வழங்காததால் நடிகை மினு முனீர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார் என மலையாள நடிகர் முகேஷ், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவைச்சேர்ந்த பிரபல நடிகர் முகேஷ். இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் முகேஷ், "மினு முனீர் கடந்த 2022ஆம் ஆண்டு தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு பண உதவி கேட்டார். நான் முடியாது என தெரிவித்தேன். பிறகு ஒரு லட்ச ரூபாயாவது தாருங்கள் என வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பினார். அதனைத்தொடர்ந்து, மினு முனீரின் கணவர் என்னை தொடர்பு கொண்டு ஒரு பெரிய தொகையை கேட்டு மிரட்டினார். இந்நிலையில், கேரளாவில் தற்போது நிலவும் சூழலை பயன்படுத்திக்கொண்டு என் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். நான் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்பேன்" என தெரிவித்துள்ளார்.