அமைச்சர், கலெக்டருக்கு நேராக போன் போட்ட சிறுவன்...ஊரையே கொண்டாட வைத்த மாஸ் சம்பவம்!

x

அறந்தாங்கி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தனிப்பட்ட முயற்சியால் ஒரு கிராமத்திற்கே பேருந்து வசதி கிடைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பன்னியூர் கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பேருந்து வசதி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி செல்வதற்கு சிரமத்தை சந்தித்த அதே கிராமத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் ஜவகர்ஸ்ரீநாத், அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது கிராமத்திற்கு சாலை மற்றும் பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் புதிய சாலை அமைக்கப்பட்டு, அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் பேருந்து சேவையும் தொடங்கப்பட்டது. இதற்கு காரணமான மாணவர் ஜவகர்ஸ்ரீநாத்தை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்