தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை உயர்வு.. “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்"

x

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கு மத்தியில் தனியார் பால் நிறுவனங்கள் திடீரென விலையை உயர்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணங்களை கூறியுள்ள ஆரோக்யா பால் நிறுவனம் கடந்த மாதம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.

இதைத்தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

புயல் பாதிப்பை தமிழகம் சந்தித்துள்ள வேளையில் தனியார் பால் உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், ஆந்திராவைச் சேர்ந்த டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை சுற்றறிக்கை வாயிலாக பால் முகவர்களுக்கு கடந்த வாரம் தெரிவித்ததாகவும்,

புயல் பாதிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் புதிய விற்பனை விலையை இந்த நிறுவனங்கள் அமல்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...

அதன்படி 1 லிட்டருக்கு 2 ரூபாயும், அரை லிட்டருக்கு 1 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது...பால் கொள்முதல் விலையில் பெரியளவில் எந்த விலை உயர்வு மாற்றங்களும் இல்லாத நிலையில் பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் நேரடியாகவும் தன்னிச்சையாக உயர்த்தியுள்ள அனைத்து தனியார் பால் நிறுவ னங்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விலையை வரைமுறைபடுத்தி, கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

தமிழக அரசின் ஆவின் நிறுவனம், பால் விலையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்