மிக்ஜாம் புயலில் இறந்த மகனின் செல்போனை பறிகொடுத்த தாய்-மீட்டுத் தந்த போலீசார்

x

மிக் ஜாம் புயலில் இறந்த மகனின் செல்போனை தாய் பறிகொடுத்த நிலையில், தொலைந்து போன செல்போனை மீட்டுத் தந்து அந்தத் தாயை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர் காவல்துறையினர்...

பொதுமக்களிடம் திருடு போன செல்போன்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை சேலையூர் அருகே ராஜ கீழ் பாக்கத்தில் நடைபெற்றது.

பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட 127 செல்போன்களை பொதுமக்களிடம் பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மூன்று சக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வந்திருந்தார். அவர் பறிகொடுத்த செல்போனை ஒப்படைத்தபோது அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மிக் ஜாம் புயலில் தன் மகன் அப்துல் ரகுமானை பறிகொடுத்த பாத்திமா, அவர் நினைவாக வைத்திருந்த செல்போனை மர்ம நபர்கள் மருந்துக் கடையில் மருந்து வாங்கச் சென்ற போது திருடியுள்ளனர். மிகுந்த மனவேதனைக்கு ஆளான பாத்திமா இது தொடர்பாக பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது அந்த செல்போன் திருடர்களிடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

துணை கமிஷனர் கார்த்திகேயனிடம் சல்யூட் அடித்து அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் பாத்திமா... இந்த சம்பவம் அனைவருக்கும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது...


Next Story

மேலும் செய்திகள்