MGR நினைவு நாளில் மறைந்து ... பிறரை வாழ வைத்த உண்மை ரசிகர்... நாதக தொண்டர் செய்த பேருதவி

x

மயிலாடுதுறையில் எம்.ஜி.ஆர்.நினைவு நாளன்று சாலை விபத்தில் உயிரிழந்த அவரது தீவிர ரசிகரின் கண்கள் அவரது விருப்பப்படி தானம் அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மகாதானபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கண்ணதாசன் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். இவர் எம்ஜிஆரின் நினைவு நாளான நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் உயிருடன் இருந்தபோது தான் இறந்த பின் கண் தானம் செய்ய விரும்புவதாக தன் மனைவியிடம் கூறிவந்த நிலையில், நாம் தமிழர் கட்சி அருண் என்பவரது முயற்சியில் கண்ணதாசனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன... இதையடுத்து, அவரது கண்கனை மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தினர் பெற்றுச் சென்றனர். மேலும் அவரது உடல் உறுப்புகளையும் தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்