கருணை மனு மீது உயர்நீதிமன்றம் தலையிட மறுப்பு

x
  • கருணை மனு மீது குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • கொலை வழக்கு ஒன்றில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு
  • மரண தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதனையடுத்து, ராதாகிருஷ்ணன் அனுப்புய கருணை மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராதாகிருஷ்ணனின் மரணதண்டனையை
  • ஆயுள் தண்டனையாக குறைத்து, சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி, ராதாகிருஷ்ணன் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாத நிலையில், சென்னை
  • உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கருணை மனு மீது குடியரசுத்தலைவர் ஏற்கனவே முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்