``அவ செத்து எங்க எல்லாத்தையும் தெய்வமா காப்பாத்திட்டாய்யா’’ - மேல்மருவத்தூர் சென்ற போது விபரீதம்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் இருந்து 110 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் செல்வதற்காக மூன்று பேருந்துகளில் நேற்று நள்ளிரவு புறப்பட்ட நிலையில் டீ குடிப்பதற்காக பேருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி சாலையில் ஓரமாக நிறுத்திய போது பேருந்து மீது மின்சார கம்பி உரசியதில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அகல்யா மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அவர் மீது மின்சாரம் பாய்வதை பார்த்த மற்ற பக்தர்கள் பேருந்தில் இருந்து இறங்காமல் உள்ளேயே அமர்ந்துள்ளனர்.

பின்னர் அகல்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அகல்யா சென்ற பேருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து மாற்று வாகனத்தில் அகல்யாவுடன் பயணம் செய்த 51 பேரை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணுடன் அருகில் அமர்ந்து பயணம் செய்த சந்தியா என்பவர் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

முப்பதுவெட்டி, ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே மின் கம்பி மீது பேருந்து உரசியதில், மின்சாரம் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார்...

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுடன் இருந்த மற்றொரு பெண் அளிக்கும் அளித்துள்ள தகவல்களை பார்க்கலாம்...

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, மின்கம்பி மீது பேருந்து உரசி விபத்து

முப்பதுவெட்டி பகுதியில் நடந்த விபத்தில் பேருந்தில் இருந்த பெண் மின்சாரம் தாக்கி பலி

வாணியம்பாடியை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 40 பேர் பேருந்தில் மேல்மருவத்தூர் வந்து கொண்டிருந்தனர்

முப்பதுவெட்டி பகுதியில் பேருந்தை நிறுத்தியபோது நேர்ந்த விபத்து

சாலையோர மின் கம்பி பேருந்தின் கூரை மீது மின் கம்பி உரசி விபத்து - பேருந்து முழுவதும் பாய்ந்த மின்சாரம்


Next Story

மேலும் செய்திகள்