``அடுத்த மாசம் கல்யாணம்..110 பேரை காப்பாற்ற உயிர்விட்ட தெய்வம்'' - நினைத்து நினைத்து கதறும் உறவுகள்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரத்தில் இருந்து 110 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஆன்மீக பயணம் செல்வதற்காக 3 பேருந்துகளில் நேற்று நள்ளிரவு புறப்பட்ட நிலையில், டீ குடிப்பதற்காக பேருந்து ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டது. அப்போது பேருந்தின் மீது மின்சார கம்பி உரசியதில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற இளம் பெண் அகல்யா மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலியானார்... அவர் மீது மின்சாரம் பாய்வதை பார்த்த மற்ற பக்தர்கள் பேருந்தில் இருந்து இறங்காமல் உள்ளேயே அமர்ந்துள்ளனர். இவ்விபத்தில் மேலும் இருவருக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது... பேருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து மாற்று வாகனத்தில் மற்றவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அகல்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. 10ம் வகுப்பு முடித்த அவர், வீட்டில் விவசாய பணிகளுக்கு உதவி செய்து வந்த நிலையில், அவரை இழந்து குடும்பத்தினரும் உறவினர்களும் ஊர் மக்களும் வாடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்